< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 Oct 2022 5:53 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்

அரியலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் பூக்கார தெருவில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி காணப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் குப்பைகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணல் குவாரியை நிறுத்த கோரிக்கை

வானம் பார்த்த பூமியான அரியலூர், கடலூர் மாவட்ட விவசாயிகள் வான் மழையையும், எப்போதாவது நிறைந்து வழிந்து வரும் ஆற்றுத் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு மட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும்கூட இதுதான் நிலை. பல ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆண்டு போதுமான மழை பொழிந்தது. இந்த ஆண்டு அது தொடருமா? எனத்தெரியவில்லை. இந்தநிலையில், வழிந்து வரும் ஆற்று நீரை கடைமடைப் பகுதிக்கு வந்துசேர விடாமல் ஆற்றுப்படுகைதோறும் மணல் கொள்ளை நடந்துவருகிறது. சவடு மண் என்ற பெயரில் விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்பிடிப்புப் பகுதிகள், ஆற்றுப் படுகைகள் என எல்லா இடங்களிலும் மணல் எடுப்பதற்கு மாவட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர். தீவுப் பகுதிகளில் மணல் எடுக்கக் கூடாது தீவுப் பகுதியிலும் சவுடு மண் எடுக்க அதிகாரிகள் முறைகேடாக அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இந்தநிலையில் அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தின் ஆற்றுப்பகுதியில் சவடு மண் என்ற பெயரில் நடைபெறும் மணல் குவாரிக்கு அந்தக் கிராம விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். சிலுப்பனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்

அச்சத்துடன் பயணம் செய்யும் பயணிகள்

அரியலூர் மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான அரசு பஸ்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்த நிலையில் காணப்படுவதினால், பஸ்சில் பயணம் செய்யும் இப்பகுதி மக்கள் அச்சத்துடனையே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதலமடைந்து காணப்படும் அரசு பஸ்களை பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத ஏரி, குளங்கள்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் தற்போது பெய்து வரும் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மழைநீரை முழுமையாக சேகரிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பாலம் கட்ட வேண்டும்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், தூத்தூர் கிராமத்தில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் வழியில் பொன்னாறு பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. பொன்னார் பிரதான வாய்க்காலை கடந்து செல்வதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தூத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை சென்று அடைய முடியும். கொள்ளிடம் ஆற்றின் கரையையும், தூத்தூர் கிராமத்தையும் இணைக்கும் பொன்னாற்று பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இப்போது அது சிதிலமடைந்து ஒரு பகுதி இடிந்த நிலையில் காணப்படுகிறது. முற்றிலும் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்படுவதற்குள் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய பாலம் கட்ட ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்