< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Oct 2022 5:33 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தடுப்பூசி முகாம் நடத்தப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், முள்ளூர் ஊராட்சியில் உள்ள மக்கள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால் கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கால்நடை தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தூர்வாரப்படாத குளம், ஏரிகள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பெரியகுளம் மற்றும் வரத்துவரிகள் சுத்தம் செய்யப்படாமல் புதர்மண்டி காணப்படுவதினால், தற்போது பெய்து வரும் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதர்களை அகற்றி குளம், ஏரிகளை தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார் சாலை அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி தாவுத்நகர் வரை உள்ள சாலையை முழுமையாக குறிஞ்சாவயல் மெயின்ரோடு வரை தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, வேந்தன்பட்டி- ஏனாதி செல்லும் சலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற இடங்களில் சாலைகளை இருள் சூழ்ந்து உள்ளதால், இந்த சாலையின் வழியாக செல்பவர்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, புதுக்கோட்டை சாலையில் மலைக்குடிபட்டியில் இருந்து ராஜாகிரி வரை அமைக்கப்பட்டுள்ள சாலை ஆங்காங்கே சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அம்பலவாண நேந்தல் அருகே உள்ள சித்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழை பெய்யும் போது சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீருக்காக தவிக்கும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சித்தாவனம், அம்பலவாண நேந்தல், மணல்மேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் குடிநீர் எடுப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்