< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Oct 2022 7:15 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக்கடை அருகே இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி, நடையனூரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் பின்புறம் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேம்பாலம் அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டு திறக்க காலதாமதம் ஏற்படுவதால், ரெயில்வே கேட் மூடப்படும் ஒவ்வொரு முறையும், நூற்றுக்கணக்கான வாகனங்கள் 2 கிலோ மீட்டர் வரை மணப்பாறை ரோட்டிலும், வடபுறம் சுங்ககேட் ரவுண்டானாவிலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நிற்கின்றன. மேலும் நாள்தோறும் 40-க்கும் மேற்பட்ட முறை மூடப்படுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், அவசர நிமித்தமாக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், மண்மங்லம் வட்டம், வாங்கல் குப்புச்சிபாளையத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாய்ந்து கிடக்கும் தொலைபேசி கம்பம்

கரூர் மாவட்டம், குளித்தலை கிளை நூலகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த நூலகத்தின் சுற்றுச்சுவரில் நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் தொலைபேசி கம்பம் உள்ளது. இதனால் அதன் அருகே செல்லும் மக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை வசதிகள் வேண்டும்

கரூர் மருத்துவகல்லூரிக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் வெளியே மாநகராட்சி இடத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் நோயாளாா்களை பாா்க்க வருபவர்களுக்கென கழிவறை வசதி இல்லை. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவக்கல்லூரி முதல் ராஐாநகர் வரை உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. அதை தார்சாலையாக அமைத்தால் வாகன போக்குவரத்திற்கு உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்