< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Oct 2022 7:12 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

எரியாத மின்விளக்கால் தொடரும் விபத்துகள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அரசரப்பட்டி நால்ரோட்டில் உள்ள ஹைமாஸ் விளக்கு நீண்ட நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. மேலும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத உயர் கோபுர மின்விளக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மலைக்குடிபட்டி கடைவீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுவதினால் பெண்கள் இப்பகுதியில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேதமடைந்த ஊர் வழிகாட்டி பலகை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் இருந்து சத்திரம் செல்லும் சாலையில் தர்ஹா அருகில் உள்ள ஊர் வழிகாட்டி பலகை சேதமடைந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் புதுக்கோட்டை, விராலிமலை செல்வதில் குழப்பமடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்துகள் தடுக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கீரமங்கலம் மெய்நின்றநாதர் கோவிலின் பின்புறம் பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில் குறுக்குவழிப்பாதை உள்ளது. இந்த வழியாக வரும் வாகனங்கள் சாலைவிதிகளைப் பின்பற்றாமல் அதிவேகமாக சாலையைக் கடப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறுக்குவழிப்பாதையை மூடி விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போதை ஆசாமிகள் அட்டகாசம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், வானதிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வானதிராயன்பட்டி ஆதிதிராவிட காலனியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் குழாய்களை மர்மநபர்கள் உடைத்து வருகின்றனர். இதனால் ஏராளமான தண்ணீர் வீணாகி வருவதுடன், நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42-வது வார்டு அந்தோணியார் சர்ச் எதிரே உள்ள நியூ டைமன் நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். மேலும் தெருநாய்கள் சாலையின்குறுக்கே ஓடுவதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார்சாலை அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஒன்றியம், பாச்சிகோட்டை ஊராட்சி, பாப்பான்விடுதி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்லும் சாலையை தார்சாலையாக தரம் உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்