< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Oct 2022 6:28 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிப்படை வசதிகள் இன்று தவிக்கும் மக்கள்

திருச்சி மாவட்டம், காட்டூர் அம்மன் நகர் 7-வது குறுக்குத் தெரு விரிவாக்கம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, வடிகால் வசதி முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால் மழை பெய்யும் போது, மழைநீர் செல்ல வழி இன்று தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் காலி மனைகளிலும் வீடுகளின் அருகே மழைநீர் தேங்குவதால் அவற்றிலிருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

திருச்சி மாநகராட்சி, பொன்மலை கோட்டம், எடமலைப்பட்டிபுதூர், ராமச்சந்திரா நகர் சித்தி விநாயகர் முதல் வீதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார மையம் அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள், கடந்த 10 ஆண்டுகளாக அரசு சுகாதார மருத்துவ வசதிக்காக 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எரகுடி சுகாதார மையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் சுகாதார மையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, கருப்பம்பட்டியிலிருந்து வைரபெருமாள்பட்டிக்கு, பனந்தோப்பு வழியாக செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து வாகன ஓட்டிகளை மிகவும் அச்சுறுத்தும் நிலையிலுள்ளது. சாலையை புதுப்பித்து 10 வருடங்களுக்கும் மேலாகியதால் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து புதுப்பித்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், மாராடியிலிருந்து பாலகிருஷ்ணம்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. விவசாயிகளின் அத்தியாவசியமான 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்