< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Oct 2022 6:27 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிதிலமடைந்த மின்கம்பம்

கரூர் மாவட்டம், பேச்சிப்பாறை அருகே தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. அந்த மின்கம்பத்தின் வழியாக மின்கம்பிகள் இணைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பத்தில் உள்ள கான்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பிகள் மட்டும் தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து தார் சாலையில் விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

கரூர் மாவட்டம், நன்செய் புகழூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதனால் தார் சாலை நெடுகிலும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக இருந்தது. இதன் காரணமாக தார் சாலையை அகற்றிகப்பி சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கப்பி சாலை அமைக்கப்பட்டு 6 மாதத்திற்கு மேலாகியும் இதுவரை தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் நெடுவிலும் ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குகைவழிபாதை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், மரவாபாளையம் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில்வே பாதை வழியாக ஏராளமான பயணிகள் ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. ரெயில்வே பாதைக்கு பின்புறம் மதுரை வீரன் நகர், மகாத்மாகாந்தி நகர், நாடார்புரம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம் என பல்வேறு ஊர்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருந்து வருபவர்கள் தங்களின் குழந்தைகளை மரவாபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து வருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் ரெயில்வே பாதையை கடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தங்களது வீடுகளுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் செய்பவர்கள் ரெயில்வே பாதை வழியாக இரு சக்கர வாகனத்தை தூக்கிச் சென்று செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரெயில்வே பாதைக்கு அடியில் குகை வழி பாதை அமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத தெருவிளக்குகள்

கரூர் மாவட்டம், பாண்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. தெரு விளக்குகள் தொடர்ந்து எரிந்து வந்தது. இந்நிலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து பல இடங்களில் எரியாமல் உள்ளது. எனவே மின் கம்பத்தில் பழுதடைந்து எரியாமல் உள்ள மின் விளக்குகளை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம், நல்லிக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து கூலி வேலைக்கு செல்வோர், பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த வழியாக எந்த ஒரு பஸ் போக்குவரத்தும் இல்லாததால் இருசக்கர வாகனங்களில் மட்டுமே வெளிவர்களுக்கு சென்று வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அதேபோல் கூலி வேலைக்கு செல்பவர்களும் வாகனங்கள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்