< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 Oct 2022 6:25 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பராமரிக்கப்படாத காந்தி பூங்கா

அரியலூர் மாவட்டம், இலந்தைகூடத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்திபூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் செல்ல வழி இன்றி இந்த பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை அருகே மழை நீர் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பூங்காவிற்கு சிறுவர்கள் அதிக அளவில் வருவதினால் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் அவர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து காந்தி பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த நிழற்குடை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பு பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை சிதலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் நிழலுக்காக ஒதுங்கும்போது இடிந்து விழுந்தால் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

அரியலூர் கைலாசநாதர் கோவில் தெருவில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும் குழியுமான சாலை

அரியலூர் சிவன் கோவில் அருகே செல்லும் சாலை குண்டும், குழியமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் உள்ள சித்தேரியில் இருந்து செல்லும் வண்டி பாதை கைலாசபுரம் கிராமத்தை சென்றடையும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்