< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Sep 2022 6:56 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தார்சாலை அமைக்கப்படுமா?

திருச்சி கருமண்டபம் ஜெய நகர் 2-வது தெரு பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், பாதாளை சாக்கடை அமைப்பதற்காக சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இந்த நிலையில் பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் தார் சாலை மண்சாலையாக மாறி உள்ளது. இதனால் வெயிலில் வாகனங்கள் செல்லும்போது இப்பகுதி புகைமண்டலம் போல் காட்சி அளிப்பதுடன், மழை பெய்யும் போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள்

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் கேட்பாரற்று பல இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து அதிக துர்நாற்றம் வீசுவதாலும், பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உண்டாகி வருகிறது. மேலும் இந்த வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் கேட்பாரற்ற நிலையில் சாலையில் நிறுத்தப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெரு நாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஆமூர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை வழியாக மாணவ- மாணவிகள் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகை

திருச்சி மாவட்ட மைய நூலகம் முன் உள்ள நடைபாதையில் திருச்சியில் நடக்கும் புத்தக திருவிழா பற்றிய அறிவிப்பு விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடைப்பதையை பயன் படுத்த முடியவில்லை. இதனால் பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதி

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம்அரசு மருத்துவமனையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் மருத்துவமனையின் மரங்களில் தஞ்சமடைந்து, நோயாளிகள், குழந்தைகளிடமுள்ள தின்பண்டங்களை பறித்துச் செல்வதால், மருத்துவமனைக்கு வருபவர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்