< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Sep 2022 6:55 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிதிலமடைந்த தார்சாலை

கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூர்த்திபாளையம் செல்லும் தார் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த தார் சாலை வழியாக ஏராளமான கார்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுகிலும் சிதிலமடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத மின் விளக்குகள்

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பாலத்தில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் புகழூர் காகித ஆலை நிறுவனம் சார்பில் பழைய பாலத்திற்கு புதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட மின்விளக்குகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்த நிலையில் பல மின் விளக்குகள் எரியாமல் உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த எரியாத மின்விளக்குகளை மாற்றி மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலை மெயின் சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பெரிய சாலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு அதில் மின்கம்பி இணைக்கப்பட்டு அந்த வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கனரக வாகனங்களால் விபத்து அபாயம்

கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் அதிக வெளிச்சம் அளிக்கக்கூடிய விளக்குகள் பயன்படுத்துவதினால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்கள் கூசுகிறது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்