< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Sep 2022 6:42 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்பு

பெரம்பலூர் ஒன்றியம், வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில் பஸ் நிறுத்த இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையில் அமர முடியாமல் வெளியே பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழுதடைந்த சாலை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே வரும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் டிரைவர்கள் பஸ்சை மிகுந்த சிரமத்துடன் ஓட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சாலைக்கு பதிலாக புதிதாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிக்கு கான்கிரீட் கட்டிடங்கள் கட்ட வேண்டும்

பெரம்பலூர் புறநகர்பகுதியான அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வகுப்புகள் பழமையான ஓட்டு கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவ-மாணவிகளுக்கு எந்தவொரு அசம்பாவித சம்பவங்களுக்கு ஏற்படுவதற்கு முன்பு புதியதாக கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்கு வெளியே சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேவா மையக்கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2014-15-ம் நிதியாண்டில் ரூ.14,43,000 மதிப்பில் கட்டப்பட்ட ராஜிவ்காந்தி கேந்திர சேவா மையக் கட்டிடத்தில் சுவர், கதவு, ஜன்னல்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கி சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்தும் கதவு, ஜன்னல்களுக்கு வர்ணம் தீட்டியும் பாராமரிப்பு பணி மேற்கொண்டு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்