< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Sep 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை 9-வது வார்டுக்கு உட்பட்ட புதுத்தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். புதுத்தெரு பகுதி சாலை ஆங்காங்கே சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் இந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மோட்டார் அறை

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், தாயனூர் கீழக்காட்டில் ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான மோட்டார் அறை ஒன்று உள்ளது. இந்த மோட்டார் அறையானது குடியிருப்பு பகுதியையொட்டி மேற்கூரை பெயர்ந்து அறையின் சுவர் சாய்ந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு சேதமடைந்த மோட்டார் அறையை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜம்பேரி குமுழி அடைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஜம்பேரியில் நீர்மட்டம் உயராமலிருக்க ஏரியின் 4 குமுழிகளும் திறந்து விடப்பட்டன. இதில் நடுகுமுழியில் வெளியாகும் அதிகளவு தண்ணீர் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பதால், விவசாயம் பாதிப்படைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடுகுமுழியை அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கலங்கலாக வரும் குடிநீர்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையை அகலப்படுத்த வேண்டும்

திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா வளைவு சாலையில் இருந்து அய்யம்பட்டி சாலை வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அய்யம்பட்டி செல்லும் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்