< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Sep 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற கிணறு

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நாகனூர் ஊராட்சி, மணச்சனம்பட்டி காலனி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கிணறு பராமரிப்பு இன்றி பயனற்று காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எலும்பு கூடான மின்கம்பம்

கரூர் மாவட்டம், நடையனூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கு பின்புறம் மின் கம்பம் நடப்பட்டு அந்த மின் கம்பத்தில் இருந்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கும், விவசாய கிணற்றில் உள்ள மின் மோட்டார்களுக்கும் மின் வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அதன் அருகில் புதிய மின் கம்பம் நடப்பட்டு நீண்ட மாதம் ஆகியும் இதுவரை பழைய மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளை புதிய மின் கம்பத்தில் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் எந்த நேரத்திலும் மின் கம்பம் முறிந்து சாலையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குளத்தை ஆக்கிரமித்த செடி-கொடிகள்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள முத்தனூரில் புகழூர் கால்வாய் அருகே பெரிய குளம் வெட்டப்பட்டது. இந்த குளத்திற்கு ஓலப்பாளையம், கவுண்டன்புதூர், செல்வநகர் வழியாக வரும் உபரி நீர் வந்து நிரம்பி புகழூர் வாய்க்காலில் கலக்கிறது. குளம் நிரம்பி வழியும் போது சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு வற்றாத கிணறுகளாக உருவானது. இந்நிலையில் உபரி நீர் கால்வாய் நெடுகலும் தூர் வாராததால் ஏராளமான செடி,கொடிகள் முளைத்துள்ளது. குளத்திலும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துள்ளது. இதன் காரணமாக குளத்திற்குள் தண்ணீர் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குளம் நிரம்ப முடியாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசப்படுமா?

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளில் உள்ள சாலைகளின் பிரிவு மற்றும் வளைவு பகுதிகளில் விபத்துகளை தடுப்பதற்காக ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த வேகத்தடை சரிவர தெரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் வேகத்தடையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக கீழே விழும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடைகள் இருப்பதை அனைவரும் அறியும் வகையில் வேகத்தடையின் மேல் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்