< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 Sep 2022 6:57 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நெல் கொள்முதல் நிலையம் வேண்டும்

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவின் மையப் பகுதியாக விளங்குகிறது குழுமூர். இந்த கிராமத்தைச் சுற்றி 25 கிராம விவசாயிகள் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஆகையால் இங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து சுத்தமல்லிக்கு குறைந்த அளவிலான அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதினால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் இந்த பஸ்களில் பயணம் செய்வதினால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் பள்ளம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் திருப்பத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டது. பணிகள் முடிந்த பிறகு அந்த பள்ளம் சீரமைக்கப்பட்ட நிலையில், திரும்பவும் அதே இடத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேம்படுத்தப்படாத சித்த மருத்துவப்பிரிவு

அரியலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ பிரிவு வெறும் பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டு வருகிறது. சிறிய அளவில் செயல்பட்டு வருவதினால் சித்த மருத்துவம் சம்பந்தமாக சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அதிக நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சித்த மருத்துவப்பிரிவை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் மழைநீர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் விடுதியின் பின்புறம் வடிகால் வசதியின்றி மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்