< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Sep 2022 6:05 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்ட வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்திற்கு சத்திரமனை தண்ணீர் பந்தலில் இருந்து செல்வதற்கு குறுக்கே தார் சாலை உள்ளது. பெரம்பலூரில் இருந்து செட்டிகுளம் வருபவர்கள் அந்த சாலையை பெரிதும் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த சாலையில் ஒரு திரும்பும் பகுதியில் ஒரு இடத்தில் கிணறு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சாலையை செல்வோர்கள் அதனை கவனிக்காமல் சென்றால் கிணற்றில் விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த கிணற்றை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை

பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பெரும்பாலான சாலைகளில் முக்கியமான பகுதிகளில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லைை. இதனால் அந்தப்பகுதிகளில் இருட்டாக காணப்படுவதால் பாதசாரிகள், சைக்கிளில் செல்வோர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்குகள் எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் கொளகாநத்தம் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய்பரவும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தில் பால் பண்ணை அருகே சாலை ஓரத்தில் அதிகளவு குப்பைகள் கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளால் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி நோய் தொற்று அபாயத்திலிருந்து பொதுமக்களை காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் பகுதியில், சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருக்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் வசிப்போா், சாலையில் சென்று வருவோா் அச்சப்படுகின்றனா். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்