< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
10 Sep 2022 5:32 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் உள்ள பள்ளங்கள் சீர்செய்யப்படுமா?

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி அலுவலகத்திற்கு பின்பகுதியில் எம்.எம். நகர் மற்றும் வெங்கடாஜலபதி நகர் குடியிருப்புகள் உள்ளன. இதில் எம்.எம்.நகர் குடியிருப்பிற்கு செல்லும் பிரதான சாலையில் ஆங்காங்கே மேடு பள்ளங்களாகி, குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தடையில்லாமல் நடக்கும் மதுவிற்பனை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், காரை கிராமத்தில் எப்போதும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி, கல்லூரி பஸ்களில் அளவுக்கு அதிகமான மாணவ-மாணவிகள்

பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு, அக்கல்வி நிறுவனங்கள் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகள் ஏற்றி செல்லப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படு்ம் சூழ்நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாத போல சென்று விடுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லவும், அதனை மீறும் கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செட்டிகுளம்-ஆலத்தூர் மெயின் ரோட்டில் நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவதோடு மட்டுமின்றி அந்த வழியாக செல்வோர்களை துரத்தி கடிக்க பாய்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் விபத்துக்கு ஆளாகின்றனர். மேலும் சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் நாய்கள் ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்