< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 Sep 2022 5:20 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பராமரிப்பின்றி காணப்படும் ரவுண்டானா

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா உள்பகுதியில் பராமரிப்பு இன்றி காணப்படுவதால் தற்போது செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. மேலும் அதில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. ரவுண்டானா உள்பகுதியில் செயற்கை நீருற்று அமைத்து, அழகு செடிகள் வளர்த்து பராமரித்து வர சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் விழாக்களில் பட்டாசு வெடிக்க போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான விழாக்களில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. அதிலும் அதிக சத்தத்தை எழுப்பும் நாட்டு மருந்து வெடிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது. இதனை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க விழாக்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பெயர் பலகை வைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தின் 3 நுழைவுப்பகுதிகளிலும் ஊரின் பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் பெரிதும் குழப்பம் அடைகின்றனர். மேலும் துறையூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் உள்ளது. அங்கேயும் எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் வளைவுப்பகுதியில் ஒளிரக்கூடிய அறிவிப்பு பலகைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட‌ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்மாற்றி அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் சுமார் 3,000 மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 1100-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்இணைப்பு பெற்றுள்ளன. இந்த பகுதியில் போதுமான மின்மாற்றிகள் இல்லாததால் மாலை நேரத்தில் போதுமான மின்சாரம் வீடுகளுக்கு கிடைப்பதில்லை. அதாவது மின் பற்றாக்குறையால் வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை விதிகளை கடைபிடிக்காத பஸ்கள்

பெரம்பலூர் மாவட்டம், கோனேரிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்தூர் பிரிவு சாலையில் செல்லும் தனியார் பஸ்கள் சாலை விதிகளை கடைபிடிப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்