< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Sep 2022 7:07 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நிழற்குடை அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் வல்லத்திராகோட்டை பஸ் நிறுத்தத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள், மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் வெயில், மழையில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்ஒன்றியம், பூவரசகுடி பகுதியில் உள்ள சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று குளம்போல் தேங்குகிறது. இதனால் அருகில் குடியிருக்கும் வீட்டுவாசிகள் மருத்துவமனையில் பிரசவத்திற்காக தங்கி இருக்கும் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கழிவுநீரில் தேங்கியுள்ள கொசு உற்பத்தியினால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீணாகும் குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிதண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேறும் குழாய் உடைந்து தினமும் தண்ணீர் ஆறு போல் ஓடி வீணாகி வருகிறது. மருத்துவமனை நுழைவுவாயிலில் இந்த தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெண் டாக்டர் நியமிக்கப்படுவாரா?

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், சத்தியமங்கலம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ சேவையை பெற்று வருகின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே ஒரு ஆண் மருத்துவர் மட்டும் பணியில் உள்ளார். இந்த மையத்தில் பெண் நோயாளிகள் மிகுதியான அளவில் குறிப்பாக கர்ப்பிணிகள் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் தொடர்பாக ஆலோசனைகள், சிகிச்சை முறைகள் வழங்குவதற்கு பெண் மருத்துவர் பணியில் இருந்தால் நன்றாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்