< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
4 Sep 2022 6:18 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாலத்தை சீரமைக்க கோரிக்கை

கரூர் மாவட்டம், நடையனூர் அருகே உள்ள கோம்புப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலன் கருதி புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் கட்டப்பட்ட பாலத்தின் கைபிடிசுவர்கள் இடிந்து உள்ளது. அதேபோல் பாலம் சிதிலமடைந்துள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமாக சாலை

கரூர் -ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நத்தமேட்டில் இருந்து குந்தாணி பாளையம் செல்வதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தார் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக சிதறடைந்து உள்ளது. இந்த தார் சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரிகள், கார்கள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றன. இந்நிலையில் சாலை நெடுகிலும் பழுதடைந்துள்ளதால் வானங்கள் தட்டுதடுமாறி செல்கின்றன. சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த காங்கிரீட் சாலை

கரூர் மாவட்டம், மரவாபாளையம் மெயின் ரோட்டில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்வதற்காக அப்பகுதி பொதுமக்களில் நலன் கருதி நெடுகிலும் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் காங்கிரீட் சாலை நெடுகிலும் சிதலடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் காங்கிரீட் சாலை நெடுகிலும் இருபுறமும் பல்வேறு செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த காங்கிரீட் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அப்பகுதி வாசகர்களின் நலன் கருதி நூலகம் கட்டப்பட்டு, பல்வேறு வகையான நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளது. நூலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் நூலக கட்டிடம் பழுதடைந்து மழை காலங்களில் மழை நீர் ஒழுகி நூல்கள் வீணாகி வருகிறது. எனவே நூலக கட்டிடத்தை சீரமைத்து மழை நீர் ஒழுகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விதிகளை மீறி ஒட்டப்படும் சுவரொட்டிகள்

கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியில் உள்ள அரசு அலுவலக சுவர்கள், அரசு பள்ளிகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவர்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என்று விதிகள் இருந்தாலும் விதியை மீறி பலர் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்