< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
3 Sep 2022 5:40 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

முறையாக வழங்கப்படாத குடிநீர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் சரியான நேரத்தில் விடுவது இல்லை. சரியான நேரத்தில் நிறுத்துவதும் இல்லை. இதனால் குடிநீர் அதிக அளவில் விரையமாகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் விடும் அளவை குறைத்து விடவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை எம்.ஜி.ஆர். சிலை முதல் அரசு மருத்துவமனை வரை உள்ள சாலை முழுதும் இருபக்கமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவசர தேவைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே அரசு மருத்துவமனை ஏரியை சுற்றி உள்ள கரை ஆக்கிரமிப்பை அகற்றி உடற்பயிற்சி பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடத்தில் இருந்து அரியலூர் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சரி செய்யாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஒடப்பேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஆலத்திபள்ளம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவசர காலங்களில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒடப்பேரி கிராமம் வழியாக ஆலத்திபள்ளம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை

அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி ரவுண்டானா பகுதியிலிருந்து (புறவழிச்சாலை) கயர்லாபாத் செல்லும் சாலை மிகவும் மோசமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. அங்குள்ள மதுபான கூடம் அருகே சாலையின் இருபுறமும் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கி சாக்கடை குளமாக உள்ளது. சாலையில் உள்ள சுண்ணாம்புக்கல் மண்களை நெடுஞ்சாலை சார்பில் அகற்ற வில்லை. மண்கள் காற்றில் பறப்பதால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கயர்லாபாத் கிராமத்தின் சாலை புழுதி மண்டலமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்