< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Aug 2022 6:40 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வடிகால் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை பெய்தால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கொசு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிராமத்தில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி இன்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராம பஸ் நிறுத்தத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வெளியூர் செல்லும் மக்கள், வேலைக்கு சென்று வருபவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார்சாலை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பாலக்கரை நோக்கி செல்லும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையில் செல்லும்போது வாகனங்கள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூரில் இருந்து பெரம்பலூர் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், அரியலூர் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அரியலூர் சென்று வருகின்றனர். ஆனால் அரியலூர் சென்று வர இருமுறை மட்டுமே பஸ் வசதி உள்ளது. அவையும் நிச்சயமாக தினமும் வருவதில்லை. இதனால் மருத்துவ, கல்வி, கட்டுமான, உணவு பொருட்கள் மற்றும் வெளியூர் செல்லும் தேவைகளுக்கு இலுப்பைக்குடி சென்று பின் அரியலூர் பஸ் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அவசர தேவை உள்ளோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாத்தனூரில் இருந்து அரியலூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்