< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Aug 2022 6:05 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், ஹைஸ்கூல்மேடு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொது கழிப்பிடம் இடிந்து விழும் நிலையில் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த பொதுகழிப்பிடத்தை இடித்து அகற்றினர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

விபத்துகள் தடுக்கப்படுமா?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு இந்திராநகர் அருகில் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. திண்டுக்கல்லில் இருந்து அரவக்குறிச்சி வழியாக கரூர் செல்லும் பஸ்கள் பள்ளப்பட்டி பிரிவு வழியாக திரும்பி செல்கிறது. இப்பகுதி பொதுமக்களும், குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும் அதிகமாக வந்து செல்லும் பகுதியாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளப்பட்டி பிரிவு சாலை திரும்பும்போது தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. இந்த விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு இந்திராநகர் அருகில் மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எலும்பு கூடான மின்கம்பம்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், பாதிரிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி மேற்கு தெருவில் சாலையோரம் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின் நிறுத்தத்தால் மக்கள் அவதி

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள ஜல்லிப்பட்டியில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதினால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அரசு மஞ்சள் மார்க்கெட் அமைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தப்பாளையம், நாகம்பள்ளி, ராஜபுரம், சின்னாக்கவுண்டனூர், மூலப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மஞ்சள் பயிரிடுகின்றனர். இப்பகுதியில் விளைவிக்கப்படும் மஞ்சள் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுக்குதான் அனுப்பப்படுகிறது. அரவக்குறிச்சி பகுதியில் அரசு மஞ்சள் மார்க்கெட் அமைத்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஈரோடு சென்றுவர ஆகும் போக்குவரத்து செலவு மிச்சமாகும். எனவே அரவக்குறிச்சி பகுதியில் அரசு மஞ்சள் மார்க்கெட் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்