< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 Aug 2022 6:09 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் பஸ் நிலையத்திற்கு தினமும் எராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பயணிகள் திறந்தவெளிகளில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகளை துரத்தும் தெரு நாய்கள்

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய்வாய்ப்படும் கால்நடைகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாளனவர்கள் காலநடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகள் நோய்வாய்ப்படுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கால்நடை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் நேருநகர், குளோபல் நகர், ரெங்காநகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் பலநூற்றுக்கணக்கானவர்கள் குடியிருந்துவருகிறோம். இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைக்காததால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை காலியாக உள்ள வீட்டுமனைகளில் போட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை தெருநாய்கள் கிளறி விட்டுசென்றுவிடுகின்றன. வாரக்கணக்கில் குப்பைகள் சேர்ந்து அப்பகுதில் நோய்ப்பரப்பும் நிலையில் காட்சி அளிக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதிகளில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்