< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Aug 2022 5:54 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார்சாலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, மீமிசலில் இருந்து ஆர்.புதுப்பட்டினம் செல்லும் சாலை கடற்கரையில் இருந்து அதிக மீன்கள் ஏற்றி செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வானத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த கழிவுநீர் வாய்க்கால்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருச்சி பஸ்கள் செல்லும் முனையத்தில் நடுவே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் சிதிலமடைந்து பயணிகளுக்கும், பஸ்களுக்கும் இடையூறாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் இதனால் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கால்நடைகளை கடிக்கும் தெருநாய்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம் உள்பட சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இவை கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றும்போது சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் நாய்கள் கூட்டம் கூட்டமாக சென்று ஆடு, மாடுகளை கடித்து குதறுவதால் இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது போன்ற தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் உள்ள பழமையான பெரிய சந்தை செயல்பட்டதால் சந்தைப்பேட்டை என்று பெயர் உருவானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சந்தை கடைகள் அமைக்க வேண்டிய இடங்களில் பேரூராட்சி குப்பைகளை கொட்டி நிரப்பியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன் நூற்றுக்கணக்கான நாய்களும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குப்பைக்கிடங்கை மாற்றுவதாக எழுதிக்கொடுத்த பேரூராட்சி நிர்வாகம் பல மாதங்களாக மாற்றாமல் மீண்டும், மீண்டும் குப்பைகளை கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருகின்றனர். ஆகவே சந்தை திடலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி மீண்டும் வாரச்சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான நிலையில் உள்ள சுவிட்ச்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள தெரு விளக்கின் சுவிட்ச் மின் கம்பத்தின் அடிப்பாகத்தில் வைத்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் , கால்நடைகள் உட்பட இதில் சிக்கி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடகாடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்