< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Aug 2022 5:56 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இருக்கைகள் இன்றி பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மணப்பாறைக்கு வந்து செல்லும் பயணிகளுக்காக மணப்பாறை பஸ் நிலையத்தில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணப்பாறை.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா கரடிபட்டி முதல் கஞ்சநாயக்கன்பட்டி வரை போடப்படும் சாலை பணி ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. ஜல்லிகள் போடப்பட்டுள்ள நிலையில் பஸ்கள் மற்றும் லாரிகள் சென்று ஜல்லிகள் குண்டும், குழியுமாக பரவலாக பரப்பி காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலை உள்ளது. இரவு நேரங்களில் வரும்போது மேடு, பள்ளம் தெரியாமல் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரடிபட்டி.

குடிநீர் குழாயில் உடைப்பு

திண்டுக்கல்-திருச்சி மத்திய பஸ் நிலையம் சாலை அரிஸ்டோ ரவுண்டானா அருகே சாலையின் அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக குடிநீர் வெளியேறி வீணாக்கி வருகிறது. மேலும் குடிநீர் வெளியேறும் இடத்தில் சாலையில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சியில் உள்ள அரசு கால்நடை மருந்தக வளாகத்தில் மதுபாட்டில்கள் உடைந்த துண்டுகளாக கிடப்பதால் கால்நடைகளுக்கும், கால்நடைகளை ஓட்டிச்செல்பவர்களுக்கும் பெரும் இன்னலாக உள்ளது. இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் மதுவை அருந்தி விட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்வது வாடிக்கையாகி விட்டதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, மருந்தகத்திற்கு முன்புற சுற்றுச்சுவர் எழுப்பி மருந்தகத்திற்கு பாதுகாப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பி.மேட்டூர்.

வீடுகளுக்குள் புகும் கழிவுநீர்

திருச்சி தீரன் நகர் 7-வது கிராஸ் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் போனதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தீரன் நகர்.

மேலும் செய்திகள்