< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Aug 2022 5:46 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சமுதாய கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு

பெரம்பலூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குபேட்டை பகுதியில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாய கூடத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் சமுதாய கூடத்தை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் சமுதாய கூடத்தில் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமுதாய கூடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சங்குபேட்டை

தார்சாலை வேண்டும்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு அருகே அரியலூர் சாலையில் மின் நகர், மாவட்ட மதுவிலக்கு போலீஸ் அலுவலகம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் உள்ளன. எளம்பலூர் ஊராட்சி எல்லைக்குள் உள்ள இந்த குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொத்து வரிகள் பெரம்பலூர் பஞ்சாயத்திற்கு தவறாமல் கட்டி வருகிறோம். மழை பெய்தால் இப்பகுதியில் உள்ள மண்சாலைகள் சேரும் சகதியுமாக மாறிவிடுகின்றன. ஆகவே இப்பகுதியில் மண்சாலைகளை தார் சாலைகள் அல்லது கான்கிரீட் சாலைகளாக மாற்றித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், துறைமங்கலம்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் மாரியம்மன் கோவில் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாராப்படாமலும், அதனருகே குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளும் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அங்குள்ள ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரவும், குப்பைகளை அள்ளுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வாலிகண்டபுரம்

நிழற்குடை தேவை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒதியம் பிரிவு சாலையில் சாலை விரிவாக்கத்தின் போது நிழற்குடை அகற்றப்பட்டது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்கும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சதீஷ்குமார், ஒதியம்

மாலைநேர மார்க்கெட் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் ரோவர் நூற்றாண்டு வளைவில் இருந்து எளம்பலூர் சாலைக்கு செல்லும் ரோவர் சாலையில் இருந்த குடிசைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் டாக்டர் தரேஸ்அகமது கலெக்டராக இருந்தபோது, அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டது. ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி அருகே எளம்பலூர் சாலையுடன் இணைப்பு சாலை புதிதாக அமைக்கப்பட்டது. ரோவர் பிரதான சாலையில் தற்போது ஆரோக்கியசாமி நகர், டயானா நகர், பாரதியார் நகர், பாரதிதாசன் நகர், ஜெனிபர் நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் வளர்ந்த பகுதியாக உருவாகி விட்டது. இப்பகுதிமக்கள் நீண்டதூரம் சென்று காய்கறிகள் வாங்கிவரவேண்டியுள்ளது. ஆகவே ரோவர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் தற்போது புதர்மண்டிப்போய் உள்ளது. அப்பகுதியில் மாலை நேர காய்கறி-கனிகள் மார்க்கெட் அமைக்கவேண்டும். இதனால் மாலை நேரத்தில் அலுவலகம் சென்றுவருவோருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெங்கடேசபுரம்

மேலும் செய்திகள்