< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 Oct 2023 12:56 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

அரியலூர் மாவட்டம், திருமானூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஊரின் நடுவே வாய்க்காலில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வசந்த், திருமானூர்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், ஸ்ரீபுரந்தானில் இருந்து அரங்கோட்டை வழியாக கோவிந்தபுத்தூர் வரை செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இந்திரன், கோவிந்தபுத்தூர்.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தினந்தோறும் இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் படிக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், விக்கிரமங்கலம்.

மேலும் செய்திகள்