< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 Oct 2023 12:27 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சிவன் கோவில். இந்த கோவில் கருவேல மரங்கள் மண்டி கிடப்பதால் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

அரியலூரில் இருந்து கல்லங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் இரவு நேரத்தில் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குப்பைகளால் துர்நாற்றம்

அரியலூர்-செந்துறை சாலையில் காமராஜ் நகர் பகுதியில் சாலையோரம் உள்ள மின்மாற்றியின் அருகே குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த வழியாக பயணம் செய்பவர்கள் அவதியடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்