< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Sept 2023 12:33 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வேகத்தடை அமைக்கப்படுமா?

பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் அம்மாப்பாளையம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள இடங்களில் சாலையின் குறுக்கே வேகத்தடைகள் அமைக்கப்படாமல் உள்ளதால், இந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அம்மாப்பாளையம்.

தெருநாய்கள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள குழந்தைகளையும், வாகன ஓட்டிகளையும் கடிக்க துரத்துகிறது. இதனால் இப்பகுதிமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகுரு, பழைய விராலிப்பட்டி.

வலுவிழந்த கிளை நூலகம்

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கிளை நூலக கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே வாசகர்கள் கட்டிடத்தில் அமர்ந்திருக்கும்போது கட்டிடம் இடிந்து விழுந்தால் பெருமளவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாசகர்கள், எசனை.

மேலும் செய்திகள்