< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
14 Sept 2023 1:17 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார வளாகம் வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா மருவத்தூர் அருகே உள்ள பனங்கூர் கிராமத்தில் ஏராளமான பெண்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியில் மகளிருக்கான சுகாதார வளாகம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெண்கள், பனங்கூர்.

சலுகை விலையில் மருந்துகள் வழங்கப்படுமா?

பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் கடந்தாண்டு புதிதாக கூட்டுறவு மருந்தகம் திறக்கப்பட்டது. அதில் 20 சதவீத சலுகை கட்டணத்தில் மாத்திரைகள் வழங்கப்பட்டது. தற்போது அந்த மருந்தகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய மாத்திரைகள் கிடைப்பதில்லை. இதனால் அதிக விலை கொடுத்து வெளியில் மருந்துகள் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. சலுகை விலையில் அனைத்து மாத்திரைகளும் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

பயனற்ற பயணிகள் நிழற்குடை

பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தெப்பக்குளம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்