அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பின்புறம் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலத்தியூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில், முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், என்.ஜி.ஓ. காலனி.