< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 Aug 2023 7:36 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடைந்து தொங்கும் மின்விளக்கு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகர் இறக்கத்தின் வளைவில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்கினை தாங்கி நிற்கும், கம்பி உடைந்து மின்விளக்கு தொங்குகிறது. எனவே இந்த வழியாக பொதுமக்கள் செல்லும்போது இந்த மின்விளக்கு அவர்கள் மீது விழுந்தால் அவர்கள் காயமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அண்ணாநகர்.

போக்குவரத்திற்கு இடையூறு

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் ஏராளமான சுண்ணாம்புகல், ஏற்றி வரும் லாரிகள், பல்கர் லாரிகள் மற்றும் நெய்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள் இதோடு அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து குப்பைகளை ஏற்றி வரும் லாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூராக முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முனியங்குறிச்சி.

எரியாத தெருவிளக்குகள்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் சாலையில் செல்லும் வகையில் சாலையோரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரத்தில் இப்பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உடையார்பாளையம்.

மேலும் செய்திகள்