< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 Aug 2023 6:42 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் குழாயில் உடைப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டபாடி ஊராட்சியில் பாளையூர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் ஆட்டுப்பண்ணை குட்டை அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் வரும் குழாயில் ஆட்டுப்பண்ணை அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பாளையூர்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஒரு சில இடங்களில் குரங்குகளின் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை எடுத்துச்செல்வதுடன், சேதப்படுத்தி விடுகின்றன. மேலும் குழந்தைகளை கடிக்க பாய்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்

பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்னையில் இருந்து பெரம்பலூர் நோக்கி வரும் பஸ்கள் மற்றும் திருச்சி, மதுரையிலிருந்து சென்னை நோக்கி வரும் பஸ்கள், தஞ்சை, கும்பகோணம் ஆகியவற்றில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சேலம், ஆத்தூர் பகுதியில் இருந்து அரியலூர், தஞ்சாவூர் நோக்கி செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. பிரதான சந்திப்பான இப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பகல், இரவு எந்த நேரமும் வந்து செல்கின்றனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வியாபாரிகள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்