< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 July 2023 11:16 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேவையற்ற வேகத்தடைகள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் சாலைகளின் குறுக்கே அதிக அளவில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அவசர தேவைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் குறித்து நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வேகத்தடைகளால் இரவு நேரத்தில் இப்பகுதிக்கு புதிதாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், செட்டிகுளம்.

பயனற்ற நூலக கட்டிடம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சித்தளி ஊராட்சி பீல்வாடி கிராமத்தில் 2009-2010-ம் ஆண்டு நூலகம் கட்டப்பட்டு, இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நூலகத்தில் புத்தகங்களும் இல்லை. மேலும் மின் இணைப்பும் கொடுக்கப்படாமல் உள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து அரசு நிதியுதவியில் கட்டப்பட்ட இந்த நூலகம் பொதுமக்கள் பயன்பாடு இன்றி பயனற்று கிடக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த நூலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆசைத்தம்பி, பீல்வாடி.

பெயரளவுக்கு எரியும் மின்விளக்கு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா சிறுவயலூர் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் போதிய வெளிச்சம் இன்றி எரிகிறது. இதனால் இப்பகுதி வழியாக இரவு நேரத்தில் செல்லும் முதியவர்கள் தட்டு தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முதியவர்கள், சிறுவயலூர்.

தொடர்திருட்டால் அச்சம்

பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சி, அருமடல் கிராமத்தில் தெடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் சாலையில் பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் போலீசார் இரவு, பகல் என இரு வேலையும் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அருமடல்.

மேலும் செய்திகள்