< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 July 2023 11:34 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தூர்வாரப்படாத ஏரி

அரியலூர் நகரப் பகுதியில் உள்ள செட்டி ஏரி தூர்வாரப்படாமல் உள்ளதால் தூர்ந்து வருகிறது. இதனால் மழை பெய்யும் போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மோசிகீரன், அரியலூர்.

தூர்வாரப்படாத சந்தேரி

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி ஊராட்சி ஆ.சோழங்குறிச்சி கிராமம் ஶ்ரீ பச்சையம்மன் கோவில் அருகே உள்ள சந்தேரி என்ற குடிநீர் ஏரியினை இப்பகுதி மக்கள் மட்டும் இன்றி இக்கிராமத்தை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேரி முறையாக தூர்வாரப்படாததாலும், புற்கள், பாசிகள் படிந்து உள்ளதாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் மழைபெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சக்திவேல், ஆ.சோழங்குறிச்சி.

பாராக மாறிவரும் ஆஸ்பத்திரி வளாகம்

அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே போலீஸ் நிலையம், நூலகம், தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மது பாட்டில்களை வாங்கி வரும் மதுப்பிரியர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பார் போல் பயன்படுத்தி வருகின்றனர். சிலர் மது போதையில் அங்கேயே படுத்துக் கொள்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி.

வேகமாக செல்லும் லாரிகள்

அரியலூர் மாவட்டத்தில் சுமார் 9-க்கும் மேற்பட்ட சிமெண்டு ஆலைகள் இயங்கி வருகிறது. இதனால் அரியலூர் மாவட்டத்திற்கு ஏராளமான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் பள்ளி நேரங்களில் அதிவேகமாக செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

மேலும் செய்திகள்