< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 July 2023 11:29 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

முழு நேரம் செயல்படாத டிக்கெட் முன் பதிவு நிலையம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ரெயில் பயணிகளுக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையம் பகுதி நேரமாக செயல்படுவதினால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, ரெயில் டிக்கெட் முன்பதிவு நிலையத்தை முழு நேரமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரெயில் பயணிகள், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் இருந்து காரை செல்லும் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், தெரணி.

குடிநீர் பற்றாக்குறை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் தேவைக்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமான அளவு வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், டி.களத்தூர்.

அலுவலகத்தில் உறங்கும் நாய்கள்

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு பணி நேரத்தில் அலுவலகத்தில் நாய்கள் படுத்து உறங்குகின்றன. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்