< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
மதுரை
மாநில செய்திகள்

தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
24 July 2023 2:30 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் பற்றாக்குறை தீருமா?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா மன்னாடிமங்கலம் கிராமத்தில் வார்டு எண் 8 ல் மாரியம்மன் கோவில் தெருவில் குடிநீர் சரியாக வினியோகிக்கப்பட வில்லை. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே வாரத்தின் அனைத்து நாட்களும் தடையின்றி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

குவிந்து கிடக்கும் குப்பை

மதுரை டவுன்ஹால்ரோடு தெப்பக்குளம் பகுதியில் குப்பைகளை சாலையில் கொட்டி செல்கின்றனர். இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு காணப்படுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குஞ்சிராஜன், தெப்பக்குளம்.

ரெயில்வே மேம்பாலம் திறப்பது எப்போது?

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்து பலமாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் சோழவந்தான் பஸ் நிலையமும் திறக்கப்படாமல் இருக்கிறது.எனவே சோழவந்தான் ரெயில்வே மேம்பாலம், பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுரிநாதன், சோழவந்தான்.

சாலையில் வெளியேறும் கழிவுநீர்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் மேலப்பட்டமார் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் நிரம்பி சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில்குமார், மதுரை.

பஸ்கள் நின்று செல்லுமா?

மேலூரில் இருந்து அழகர்கோவில் செல்லும் சில டவுன் பஸ்கள் காலை 8 மணிக்கு கிடாரிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்கிறது. இதனால் அந்த வழியாக பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பஸ் நிற்காததால் அவதிப்படுகிறார்கள். எனவே இப்பகுதியை கடந்து செல்லும் அனைத்து பஸ்களும் இவ்வழியே நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேல்ராஜ், மேலூர்.

Related Tags :
மேலும் செய்திகள்