< Back
மாநில செய்திகள்
ஸ்ரீ மந்தவெளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஸ்ரீ மந்தவெளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
13 Aug 2023 8:27 PM IST

பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தவெளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

பேரம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தவெளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 2-ந்தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு அம்மன் கரகம் திருவீதிஉலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன்தினம் மாலை தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

தீமிதி திருவிழாவை பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர். அதை தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மந்தவெளி அம்மன், விநாயகர், முருகர், பெருமாள், முந்திரி தோப்பு நாகாத்தம்மன், ஹரிஹரன்மேடு நாகாத்தம்மன், சிவசக்தி அம்மன் போன்ற 7 சாமிகள் வாணவேடிக்கைகள் முழங்க வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உடலில் அலகு குத்தி பொக்லைன் எந்திரம் மூலம் அந்தரத்தில் பறந்து வந்து ஒவ்வொரு சாமிக்கும் மலர் மாலை அணிவித்து நூதன முறையில் வழிபாடு செய்தனர். இந்த தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மந்தவெளி அம்மன் கோவில் விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்