< Back
மாநில செய்திகள்
முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தினத்தந்தி
|
19 Jun 2023 12:00 AM IST

குன்னம் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முத்து மாரியம்மன் கோவில்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, வழிபாடு, திருவீதியுலா, ஊர்வலம், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த 8 நாட்களாக நடைபெற்றது.

தீமிதி திருவிழா

திருவிழாவின் சிரக நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு செட்டி ஏரியில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் நன்னை, வேப்பூர், ஓலைப்பாடி, வைத்தியநாதபுரம், மண்டபம், கிழுமத்தூர், சாத்தநத்தம், வடக்களூர், பரவாய், பெருமத்தூர், மிளகாய்நத்தம் உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு, அம்மன் வழி விடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்