< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
|18 July 2023 11:43 PM IST
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், நாயகனைபிரியாள் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு திரவுபதி அம்மனுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏரியில் இருந்து கரகம் சோடிக்கப்பட்டு, வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கரகம் கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து திரளான பக்தர்கள் தீ மிதித்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஜெயங்கொண்டம், வானதிரையன்பட்டினம், துளாரங்குறிச்சி, இடையாறு, ஏந்தல், உடையார்பாளையம், குமிழியம், பரணம் தா.பழூர், கோடங்குடி, கோட்டியால் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.