< Back
மாநில செய்திகள்
டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்: சீமான்
மாநில செய்திகள்

டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்: சீமான்

தினத்தந்தி
|
8 July 2023 2:44 PM IST

டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

டிஐஜி விஜயகுமார் பணிச்சுமை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், விஜயகுமாரும் நானும் ரொம்ப நெருக்கம் உறவுக்காரர். எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு நிறைய அழுத்தம் இருந்தது. பணிச்சுமையும் இருந்தது. மிகச்சிறந்த அறிவாளி. எல்லோர் மீது அன்பாக இருப்பார். துணிச்சல்காரர். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் ஏன் இப்படி செய்தார் என்று யோசித்து கொண்டிருந்தேன். மன தடுமாற்றம் உள்ளவர்கள், கோழை அப்படி யாராவது இருந்தால் கூட பரவாயில்லை. துணிச்சலான காவல்துறை அதிகாரி இப்படி செய்து கொண்டது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துளி கூட நாங்கள் சிந்தித்து பார்க்கவில்லை. டிஐஜி நிலையில் இருக்கும் அதிகாரிக்கே இத்தனை அழுத்தம் இருக்கிறது என்றால் சாதாரண காவலர்களுக்கு எப்படி மன அழுத்தம் இருந்திருக்கும். பணிச்சுமை அதிகம் உள்ளது"என்றார்.

மேலும் செய்திகள்