< Back
மாநில செய்திகள்
முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை டி.ஐ.ஜி. ஆய்வு
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை டி.ஐ.ஜி. ஆய்வு

தினத்தந்தி
|
17 Oct 2023 11:32 PM IST

திருவண்ணாமலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் வருகை

திருவண்ணாமலை அருகே உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் வருகிற 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார். மேலும் 22-ந் தேதி கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்கிறார்.

டி.ஐ.ஜி. ஆய்வு

இதையொட்டி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வருகை தரும் எல்லை பகுதியான கீழ்பென்னாத்தூரில் இருந்து அவர் செல்லும் வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் முதல்- அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்காக மலப்பாம்பாடி கிராமத்தில் மற்றும் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானங்களில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் மேடை மற்றும் பந்தலிலும், அதன் சுற்று வட்டார பகுதியிலும் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்தும் அவர் போலீசாருடன் ஆய்வு செய்தார்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்