< Back
மாநில செய்திகள்
டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு

தினத்தந்தி
|
9 Feb 2023 12:15 AM IST

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள், வழக்கில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 4 சக்கர வாகனங்களையும் பார்வையிட்ட அவர் போலீஸ் நிலையத்தின் தூய்மை பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்