< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
|8 Oct 2023 12:32 AM IST
கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகள், கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விபரம், திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள், பழைய குற்றவாளிகள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார். பின்னர், போலீஸ் நிலையங்களில் அடிப்படை வசதிகள் தேவை குறித்த விபரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், மணிகண்டன், துணை சூப்பிரண்டுகள் ஆகியோர் உடன் இருந்தனர்.