< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
|23 April 2023 2:57 AM IST
போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
தா.பேட்டை:
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ளவும், கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணவும், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் அறிவுரைகளை வழங்கினார். மேலும் போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார். அப்போது முசிறி உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின், இன்ஸ்பெக்டர்கள் தா.பேட்டை பொன்ராஜ், தொட்டியம் முத்தையன், முசிறி செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.