< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூரில் குருபூஜை விழாவை முன்னிட்டு மருது பாண்டியர் மணிமண்டபத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு
சிவகங்கை
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் குருபூஜை விழாவை முன்னிட்டு மருது பாண்டியர் மணிமண்டபத்தில் டி.ஐ.ஜி. ஆய்வு

தினத்தந்தி
|
19 Oct 2023 12:30 AM IST

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

குருபூஜை

முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருது சகோதரர்களின் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 24-ந் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மணி மண்டபத்திற்கு வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு விழா வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டி.ஐ.ஜி. ஆய்வு

இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர்கள் மணிமண்டபம் மற்றும் திருப்பத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள நினைவு தூண் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் விழா நிகழ்ச்சிகள் குறித்து மருது பாண்டியர் வாரிசுதாரர் குழு தலைவர் ராமசாமியிடம் கேட்டறிந்தார். இதை தொடர்ந்து பாதுகாப்பு குறித்தும், வாகனம் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன், தேவகோட்டை கோட்டாட்சியர் பாலுதுரை, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்பத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வபிரபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்