< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்அரசு பஸ் டிரைவர் திடீர் சாவுபோலீசார் விசாரணை
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில்அரசு பஸ் டிரைவர் திடீர் சாவுபோலீசார் விசாரணை

தினத்தந்தி
|
27 Jun 2023 12:30 AM IST

பரமத்திவேலூர்:

கரூர் மாவட்டம் சுக்காலிபட்டி அருகே உள்ள முத்துகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 57). இவர் கரூர் அரசு போக்குவரத்து கழக டவுன் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூரில் இருந்து பரமத்திவேலூர் பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். பின்னர் அங்கு பஸ்சை நிறுத்திவிட்டு பஸ்சுக்குள்ளேயே டிரைவர் மணி, கண்டக்டர் பெரியசாமி ஆகியோர் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று காலை கரூர் செல்வதற்காக கண்டக்டர் பெரியசாமி தூங்கி கொண்டிருந்த மணியை எழுப்பினார். அப்போது டிரைவர் மணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பஸ் நிலையத்துக்கு சென்ற போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரின் திடீர் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அரசு பஸ் டிரைவர் மணிக்கு பச்சையம்மன் (52) என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்