நாமக்கல்
பிலிக்கல்பாளையம் அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலிவாலிபர் படுகாயம்
|பரமத்திவேலூர்:
பிலிக்கல்பாளையம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.
தொழிலாளி
பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லா கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று காலை பிலிக்கல்பாளையத்தில் இருந்து தனது மொபட்டில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாணார்பாளையம் வேட்டுவங்காடு பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதில் கணேசன் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த கணேசன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் பிலிக்கல்பாளையம் அருகே சாணார்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகன் அபிமன்யு (வயது 23) என்பது தெரியவந்தது.
அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.