< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
அதியமான்கோட்டையில்பஸ் மோதி மூதாட்டி சாவு
|7 May 2023 12:30 AM IST
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே உள்ள கோட்டைக்கரை கிராமத்தை சேர்ந்தவர் கதிரம்மாள் (வயது 70). இவர் நேற்று அதியமான்கோட்டை பகுதியில் உள்ள கடை ஒன்றில் குடை வாங்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் குடை வாங்கிவிட்டு கதிரம்மாள் மீண்டும் கோட்டைக்கரை செல்வதற்காக அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் முன்புள்ள தர்மபுரி- சேலம் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று கதிரம்மாள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.