தர்மபுரி
மொரப்பூர் அருகேஇளம்பெண் தற்கொலை
|மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள தாமலேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது 24). இவருக்கும் ராஜீவ் காந்தி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்தார். இது தொடர்பாக மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரியாவின் தற்கொலை தொடர்பாக அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.