< Back
மாநில செய்திகள்
ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ராயக்கோட்டை அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி பலி

தினத்தந்தி
|
24 April 2023 12:30 AM IST

ராயக்கோட்டை:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காடுசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 27). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு காடுசெட்டிப்பட்டியில் இருந்து அவருடைய மோட்டார் சைக்கிளில் ராயக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ராயக்கோட்டை அருகே ஏரி சின்னகானம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது ராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கி சென்ற டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி விசப்பட்டு பலத்த காயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பன்னீர்செல்வத்தின் மனைவி சைத்ரா ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன பன்னீர்செல்வத்துக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்